Editorial / 2018 ஏப்ரல் 05 , மு.ப. 11:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
சவுதி அரேபியாவில் விஷ எறும்பு கடித்து, பெண் ஒருவர் பலியான சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின், கேரள மாநிலத்தைச் சேர்ந்த 36 வயதான, சூசி ஜெஃப்பி என்பவர், சவுதி அரேபியா நாட்டின் தலைநகர் ரியாத் நகரில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.
இவர், கடந்த மாதம் 19ஆம் திகதி, தனது வீட்டில் கொடிய விஷத்தன்மை வாய்ந்த ஒரு வகை எறும்பு கடித்த நிலையில், உடல் முழுவதும் விஷம் பரவி, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், அவர், சிகிச்சைப் பலனின்றி, நேற்று முன்தினம் (3), பரிதாபமாக உயிரிழந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எறும்பு கடித்து பெண்ணொருவர் உயிரிழந்த சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இருப்பினும், சில வகை எறும்புகள் அதிக விஷத்தன்மை கொண்டவை என்றும், அவை கடித்தால் உயிர் போகும் அபாயம் இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
3 hours ago
3 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
3 hours ago
3 hours ago