2024 ஏப்ரல் 28, ஞாயிற்றுக்கிழமை

ஒரு விருந்தினர் கூட வராத ஹோட்டல்

Mayu   / 2023 நவம்பர் 30 , பி.ப. 12:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரூ.16,000 கோடிக்கு மேல் செலவழிக்கப்பட்ட ஹோட்டல் ஒன்று 25 ஆண்டுகளுக்கு மேலாகியும் திறக்கப்படவில்லை என்பதுதான் ஆச்சரியமான விஷயம். இன்றுவரை அந்த ஹோட்டலுக்கு 
ஒரு விருந்தினர் கூட வரவில்லை. இப்போது அந்த ஹோட்டல் விளம்பரத்துக்காக மாபெரும் தொலைக்காட்சித் திரையாகப் பயன்படுத்தப்படுகிறது. 

வடகொரியாவின் தலைநகரான Pyongyang-ல் Ryugyong ஹோட்டல் அமைந்துள்ளது. இந்த ஹோட்டல் வட கொரிய சர்வாதிகாரி கிம் ஜாங்-உன்னின் ஆடம்பரமான வீட்டில் இருந்து சுமார் 12 மைல் 19.3 கிலோமீட்டர்) தொலைவில் உள்ளது. இந்த ஹோட்டல் கட்டிடத்தின் உயரம் 1082 அடி ஆகும்.

இதில் 3,000 அறைகள் கட்டும் திட்டம் இருந்து வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் 25 ஆண்டுகளாகியும் விருந்தினர் வராத ஹோட்டலாக காணப்படுகிறது.
தற்போது இந்த ​ஹோட்டலுக்கு ‘ஹோட்டல் ஆஃப் டூம்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இந்த ஹோட்டலின் கட்டுமானப்பணி 1987-ல் ஆரம்பமாகியது. பிறகு 2 வருடங்கள் கழித்து திறக்க திட்டமிடப்பட்டிருந்தது. சரியான நேரத்தில் கட்டி  முடிக்கப்பட்டிருந்தால்,  இது உலகின் மிக உயரமான ஹோட்டலாக இருந்திருக்கும். ஆனால் அதற்குப் பதிலாக,  உலகின் மிக உயரமான வெறுமையான கட்டிடம் என்ற சாதனையை பெற்றுள்ளது.

இதை கட்டுவதற்கு 1.6 பில்லியன் பவுண்டுகள் செலவாகியுள்ளதாம். சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு வட கொரியா பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டதால் 1997-ல் இதன் 
கட்டுமானம் நிறுத்தப்பட்டதாகவும், இந்த ஹோட்டல் தற்போது  விளம்பரத்திற்காக பயன்படுத்தப்பட்டு வரு கிறதாகவும்  தகவல்கள் தெரிவிக்கின்றன.

 இந்த கட்டிடத்தில் ஜூலை 2011-ல் வெளிப்புற கண்ணாடி பேனல்கள் நிறுவப்பட்டுள்ளது.  மேலும்2018-ஆம் ஆண்டில் கட்டிடத்தில் எல்இடி பேனல்கள் நிறுவப்பட்டுள்ளது. பின்னர்  வட கொரிய அரசாங்க பிரச்சாரத்திற்கான மாபெரும் திரையாக மாற்றப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X