2025 செப்டெம்பர் 01, திங்கட்கிழமை

காதலனை ரூ.11 இலட்சத்துக்கு விற்ற காதலி

Editorial   / 2025 ஓகஸ்ட் 31 , மு.ப. 10:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

இளம்பெண் ஒருவர் தன் காதலனை விற்பனை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவில் நடந்த இந்தச் சம்பவம் உலகையே அதிர்ச்சியடைய வைத்துள்ளது. வெறும் 17 வயதான ஒரு பெண், தனது காதலனை மோசடி கும்பலிடம் விற்றது மனிதாபிமானமற்ற செயல் என விமர்சிக்கப்படுகிறது.

சீனாவைச் சேர்ந்த ஜோ (17 வயது) என்ற பெண், தன்னுடைய 19 வயது காதலன் ஹுவாங்கிடம் வேலை வாய்ப்பு கிடைக்கச் செய்வதாகக் கூறி, அவரை தாய்லாந்து அழைத்துச் சென்றார். சிறந்த வருமானம் கிடைக்கும் வேலை என்று நம்பிய ஹுவாங்கும், தனது காதலியை நம்பி அந்த நாட்டிற்குச் சென்றார்.

ஆனால், வேலை கொடுக்கப்படும் என்ற பெயரில், ஜோ தனது காதலனை மியான்மரில் இயங்கும் கால்சென்டர் மோசடி கும்பலிடம் ரூ.11 லட்சத்திற்கு விற்றுவிட்டார்.

இந்தக் கும்பல் ஹுவாங்கை கடத்தி வைத்து, தினமும் 20 மணி நேரம் வேலை செய்ய கட்டாயப்படுத்தியது. ஆன்லைன் மோசடி, போலியான முதலீட்டு வலைத்தளங்கள் போன்றவற்றில் மக்கள் ஏமாறச் செய்வது போன்ற சட்டவிரோத பணிகளில் ஈடுபடச் செய்தனர். சுதந்திரம் இன்றி, மனிதாபிமானமற்ற சூழலில் அந்த இளைஞன் கடுமையாக அவதிப்பட்டார்.

மகன் கடத்தப்பட்டுவிட்டதாக அறிந்த ஹுவாங்கின் குடும்பத்தினர் கடும் அதிர்ச்சியடைந்தனர். அவர் உயிர் தப்ப வேண்டும் என்பதற்காக அவர்கள் ரூ.41 லட்சம் கும்பலுக்கு கொடுத்து மீட்டனர். இதனால் தான் அந்த இளைஞன் உயிருடன் வெளியே வர முடிந்தது.

தன்னுடைய காதலனை விற்று பெற்ற ரூ.11 லட்சம் தொகையை ஜோ சொகுசாகச் செலவு செய்து வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. விலையுயர்ந்த பொருட்கள், சொகுசு வாகனங்கள், மற்றும் பார்ட்டிகள் என அந்தப் பணத்தை தனிப்பட்ட சுகவிலாசத்திற்கே பயன்படுத்தினார்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X