Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
S.Renuka / 2025 ஜூலை 29 , மு.ப. 11:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழகத்தின் திருப்பத்தூர் மாவட்டம் புத்துக்கோவில் பகுதியில் வாணியம்பாடி கணவாய்புதூர் பகுதியை சேர்ந்த 60 வயதான நபர் ஒருவர் 'கியூ.ஆர்.' கோடு அட்டையை கையில் வைத்துக்கொண்டு 'டிஜிட்டல்' முறையில் யாசகம் எடுத்து வருகிறார்.
யாராவது சில்லறை இல்லை என்றால் “அக்கவுண்டில் போடு” என 'கியூ.ஆர்.' கோடு அட்டையை காட்டுகிறார்.
வித்தியாசமான அவரது இந்த அணுகுமுறையால் பலரும் டிஜிட்டல் முறையில் யாசகத்தை போட்டு வருகின்றனர்.
இதனைக் கண்ட பொதுமக்கள் சிலர் அவரிடம் விசாரித்துள்ளனர்.
அதற்கு அவர், தற்போது செல்போன், கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டுகள் மூலம்தான் பெரும்பாலான பரிவர்த்தனைகள் நடைபெற்று வருகின்றன.
இப்போது பர்சில் பணம் வைத்துக்கொள்வது அரிதாக உள்ளதாக தெரிவித்த அவர், தான் 3 வங்கி ஏ.ரி.எம். கார்டுகள் வைத்து இருப்பதாகவும், 'கியூ.ஆர்.' கோடு அட்டையை வைத்துக்கொண்டு 'டிஜிட்டல்' முறையில் பிச்சை எடுப்பதாகவும், இதனால் 'டிஜிட்டல்' முறையிலேயே பலர் பணம் செலுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.
இளைஞர்கள் சிலர் இதை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர். அது வைரலாகி வருகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .