2025 ஓகஸ்ட் 31, ஞாயிற்றுக்கிழமை

பெங்காலி புலிக்கு இரையான சாரதி

Kogilavani   / 2015 ஓகஸ்ட் 23 , பி.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிறுத்தையொன்று நடுச்சந்தியில் வைத்து முச்சக்கரவண்டி சாரதியின் உயிரை பரிதாபகரமாக பறித்த சம்பவம் பங்களாதேஷின் தலைநகரமான டாக்காவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

முச்சக்கர வண்டியின் சாரதி, வாகனத்தரிப்பிடத்தில் தனது முச்சக்கரவண்டியை நிறுத்திவிட்டு  அயர்ந்து நித்திரைகொண்டுள்ளார். இந்நிலையில் கொஙரீட்டினால் அமைக்கப்பட்டிருந்த மிகப்பெரிய பெங்காலி புலியின் சிலையானது அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வானின் மீது விழுந்துள்ளது.

இவ்விபத்தில் வான் நசிந்துள்ளதுடன் அயர்ந்து நித்திரைகொண்ட முச்சக்கர வண்டி சாரதியின் மீதும் விழுந்துள்ளது.
உடனடியாக தீயணைப்பு பிரிவினர் வரவழைக்கப்பட்டு புலியின் சிலையை அப்புறப்படுத்தினர். உயிருக்கு போராடியவாறு காணப்பட்ட சாரதியை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்தபோதும் அவர் ஏலவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவத்தில் மொஹட் அலி என்ற 42 வயது நபரே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

உறுதியற்ற நிலையில் காணப்படும் இச்சிலைக்குறித்து உள்ளூர்வாசிகள் ஏலவே அதிகாரிகளுக்கு முறையிட்டிருந்த நிலையிலேயே மேற்படி நபரின் மரணமும் சம்பவித்துள்ளது. இந்நிiலியல் உள்ளூர்வாசிகள் தமது ஆதங்கத்தை வெளியிட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X