2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

பெண் கடித்ததில் இளைஞன் பலி

Gavitha   / 2015 ஒக்டோபர் 21 , மு.ப. 04:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

பலருக்கிடையில் சண்டை வருவது சகஜமான விடயம்தான். பல இடங்களில் பல்வேறு விடயங்களுக்கு பலர் சண்டையிட்டுக்கொள்கின்றனர். இதில் சுவாரஸ்யமான விடயம் என்னவெனில், யார் என்று தெரியாத ஒருவருடன் அநாவசியமாக சண்டையிட்டு விபரீதத்தை விலை கொடுத்து வாங்கிக்கொள்வதுதான்.

இப்படித்தான், அயர்லாந்து விமானத்தில் பயணிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில், இளைஞர் ஒருவரை கடித்தே கொன்ற பெண் தொடர்பான செய்தி வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

போர்த்துகல் தலைநகர் லிஸ்பொனிலிருந்து டூப்ளினுக்கு 165 பயணிகள் மற்றும் 6 விமான ஊழியர்களுடன் அயர்லாந்து விமானம் ஒன்று புறப்பட்டது.

விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, அதில் பயணம் செய்த 24 வயது பிரேசில் இளைஞர் ஒருவருக்கும் அவரது அருகில் அமர்ந்திருந்த 44 வயதுடைய பெண் பயணிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

பின்னர் வாக்குவாதம் கைகலப்பாக மாறியது. இதன்போது ஆத்திரமடைந்த குறித்த பெண், இளைஞரைக் கடித்துக் குதறியுள்ளார்.

வலியால் துடித்த இளைஞன் கடியுண்ட பின்னர் மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக விமானத்தில் இருந்த மருத்துவக்குழு அவருக்கு சிகிச்சை அளித்தது. எனினும், அவருடைய மயக்கம் தெளியவில்லையாம்.

பின்னர், அவசர மருத்துவ சிகிச்சைக்காக கார்க் நகரில் விமானம் தரையிறக்கப்பட்டது. கடியுண்ட இளைஞனை உடனடியாக மருத்துவ சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதித்த பின்னர் அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து அந்த இளைஞரைக் கடித்துக் கொன்றதாக மோதலில் ஈடுபட்ட பெண்ணை அந்நாட்டு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட பெண்ணின் பிரயாணப் பொதியை பொலிஸார் சோதனையிட்ட போது, அதிலிருந்து 2 கிலோகிராம் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X