Ilango Bharathy / 2023 மார்ச் 16 , மு.ப. 10:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
பீகாரில் அண்மைக்காலமாக மர்ம நபர் ஒருவர், பெண்களை வலுக்கட்டாயமாக முத்தமிட்டு வருகின்றமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்த CCTV காட்சிகள் இணையத்தில் வெளியானதைத் தொடர்ந்தே இச்சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
குறித்த வீடியோவில் தொலைபேசியில் பேசியபடி வீதியில் சென்றுகொண்டிருந்த பெண்ணொருவரை 'சீரியல் கிஸ்ஸர் என அழைக்கப்படும் மர்ம நபர் வலுக்கட்டாயமாகக் கட்டிப்பிடித்து முத்தம்கொடுத்துவிட்டு தப்பிச்செல்வது பதிவாகியுள்ளது.

இச்சம்பவம் கடந்த மார்ச் 10 ஆம் திகதி இடம்பெற்றுள்ளதாகத் கூறப்படுகிறது. இந்நிலையில் இவ்வீடியோ வெளியானதைத் தொடர்ந்து குறித்த மர்ம நபரால் பாதிக்கப்பட்ட பலரும் இது குறித்து பொலிஸ் நிலையத்தில் புகார் அளிக்கத் தொடங்கியுள்ளனர்.
இதனால் பெண்கள் வெளியில் தனியாக நடமாட அச்சப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த நபரைத் தேடும் பணியில் பொலிஸார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
12 minute ago
24 minute ago
29 minute ago
37 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
24 minute ago
29 minute ago
37 minute ago