Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
J.A. George / 2021 ஒக்டோபர் 22 , மு.ப. 07:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
மனிதர்களுக்கான உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளில் விலங்குகளின் உறுப்புகளைப் பயன்படுத்துவதற்கான சோதனைகள் பல ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில், மூளைச்சாவு அடைந்த பெண்ணுக்கு மரபணு மாற்றப்பட்ட பன்றியின் சிறுநீரகத்தைப் பொருத்தி சோதனையை மேற்கொண்ட மருத்துவர்கள், சோதனை வெற்றி பெற்றதாக அறிவித்துள்ளனர்.
சிறுநீரகச் செயல்பாடு முடக்கப் பிரச்னையுடன் மூளைச்சாவு அடைந்த பெண்ணின் பெற்றோரது அனுமதி பெற்று, அவருக்கு வென்டிலேட்டர் சப்போர்ட் எடுக்கப்படுவதற்கு முன்னதாக இந்தச் சோதனையை மருத்துவர்கள் நியூயார்க் நகரத்தில் உள்ள NYU Langone மருத்துவ மையத்தில் மேற்கொண்டுள்ளனர்.
மனிதர்களுக்கான உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளில் விலங்குகளின் உறுப்புகளைப் பயன்படுத்துவதற்கான சோதனைகள் பல ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன. இதற்கான தேவையும் தற்காலத்தில் அதிகரித்திருக்கிறது. அமெரிக்காவில் மட்டும் 1,07,000 பேர் மாற்று உறுப்பு அறுவைசிகிச்சைக்காகக்
மனித உடலுறுப்புகள் மாற்று சிகிச்சைக்கு, உறுப்புகள் கிடைப்பது மிகப்பெரிய சிக்கலாக இருந்து வருகிறது. கள்ளச் சந்தையில் உடல் உறுப்புகளை விற்பனை செய்யும் அவலமும் தொடர்கிறது.
இந்தச் சூழல் ஓரளவு மாற, உடலுறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வு உலகம் முழுவதும் நடைபெற்று வந்தாலும், விலங்கின் உறுப்பை மாற்று அறுவைசிகிச்சை செய்வது முக்கியமான தீர்வுக்கான முதல்படி என மருத்துவ உலகம் நம்புகிறது.
சிறுநீரகம், ரத்தத்தில் இருக்கும் கழிவுகள் மற்றும் தேவையற்ற திரவத்தை வெளியேற்ற செயல்படும் உறுப்பு. இந்நிலையில் அமெரிக்காவில் நடைபெற்ற மேலே குறிப்பிட்ட அறுவை சிகிச்சையில், பன்றியின் சிறுநீரகத்தை மூளைச் சாவு அடைந்த பெண்ணின் ரத்த நாளங்களில் பொருத்தி, அதை மூன்று நாள்களுக்குக் கண்காணித்தனர். சிறுநீரகம் எவ்வித எதிர்ப்பும் இல்லாமல் சரிவர செயல்பட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
17-ம் நூற்றாண்டு முதலே விலங்கின் உடலுறுப்புகளை மனிதனுக்கு மாற்றுவதற்கான மருத்துவ அறிவியல் யோசனைகள் பிறக்கத் தொடங்கின. ஆரம்பத்தில் ரத்தமாற்று சிகிச்சைக்காக விலங்கு ரத்தம் மனிதனுக்குச் செலுத்தப்பட்டு அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது.
20-ம் நூற்றாண்டில் விலங்குகளின் உறுப்புகளை மாற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டனர். உயிரிழக்கவிருந்த குழந்தை, 21 நாள்கள் மனிதக் குரங்கின் இதயத்தைக் கொண்டு இதற்கு முன்பு உயிர்பிழைத்திருந்தது.
ஆனால், மனிதர்களுக்கு பன்றிகள்தான் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் குரங்குகளை விட வெற்றிக்கான அதிக சாத்தியக் கூறுகளைக் கொண்டுள்ளன. எனவேதான் இந்த முயற்சியில் பன்றிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
தற்போது முதல்கட்ட பரிசோதனை வெற்றி பெற்றிருப்பதையடுத்து, சிறுநீரகச் செயலிழப்பால் பாதிக்கப்பட்டு வாழ்வின் இறுதிக்கட்டத்தில் இருக்கும் நோயாளிகளை நோக்கி அடுத்தகட்டப் பரிசோதனைகள் இருக்கலாம் என்கின்றனர் நிபுணர்கள்.
8 hours ago
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
9 hours ago