Editorial / 2019 ஜனவரி 07 , பி.ப. 04:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலகில் உள்ள மொத்த சிலந்திகளின் கூட்டமும் ஒருங்கிணைந்து செயல்பட முடிவெடுத்தால் வெறும் 12 மாதத்துக்குள் மனித இனத்தையே அவைகளால் உண்டு அழித்துவிட முடியும் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
சிலந்திகள் தொடர்பில் ஆய்வு மேற்கொண்டுள்ள விஞ்ஞானிகள் தற்போது வெளியிட்ட இந்த தகவல் மனித இனத்துக்கே சவாலாக அமைந்துள்ளது.
தற்போதுவரை பெரும்பாலான சிலந்திகள், பூச்சிகளையே உணவாக கொள்கின்றன. ஆனால் சில காட்டுவகை சிலந்திகள் பல்லிகள் பறவைகள் மற்றும் சிறிய வகை பாலூட்டிகளையும் உணவாக கொள்கின்றன.
ஆனால் சிலந்திகள் தொடர்பில் ஆய்வு மேற்கொண்ட விஞ்ஞானிகள் வெளியிட்ட தகவலில் உலகில் உள்ள மொத்த சிலந்தி வகைகளும் உண்ணும் உணவின் மொத்த எடையானது, மொத்த மனித இனத்தின் எடையை விடவும் அதிகம் என தகவல் வெளியிட்டுள்ளனர்.
பூமியில் உள்ள மொத்த சிலந்தி வகைகளும் ஆண்டுக்கு சுமார் 440.9 இல் இருந்து 881.8 மில்லியன் டன் உணவு உட்கொள்கின்றன.
அதாவது உலகில் உள்ள மொத்த இளைஞர்களின் உடல் எடையே 316.3 மில்லியன் டன் என கூறப்படும் நிலையில், சிலந்திகள் ஓராண்டில் எடுத்துக் கொள்ளும் உணவின் எடை இதை விட அதிகம் என ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
மேலும் மொத்த மனித இனத்தையே ஓராண்டில் உண்டு முடித்தாலும், உணவின்றி பல எண்ணிக்கையிலான சிலந்திகள் மிஞ்சும் என ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
6 minute ago
18 minute ago
25 minute ago
36 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
18 minute ago
25 minute ago
36 minute ago