Freelancer / 2024 செப்டெம்பர் 04 , பி.ப. 04:34 - 0 - {{hitsCtrl.values.hits}}

பிரான்ஸில் கணவர் ஒருவர், தன் மனைவிக்கு போதைப்பொருள் வழங்கி அந்நியர்களை கொண்டு பாலியல் வன்புணர்வு செய்யவைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரான்ஸ் நாட்டில் 71 வயது ஓய்வூதியம் பெறும் கணவர் தன்னுடைய 72 வயது மனைவிக்கு போதைப்பொருள் வழங்கி அந்நியர்களை கொண்டு கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக பாலியல் வன்புணர்வில் ஈடுபடுத்தி வந்துள்ளார். இதுதொடர்பாக மனைவி புகார் அளித்ததன் பேரில் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
நேற்று நடைபெற்ற விசாரணையின்போது, 71 வயதான முன்னாள் அரசு மின் நிறுவன EDF ஊழியரான கணவருடன் சேர்த்து 50 பேர் அழைத்து வரப்பட்டனர். இந்த வழக்கில், 26 முதல் 74 வயது வரையிலான ஆண்கள் ஈடுபட்டு இருப்பதாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
மனைவியை பாலியல் வன்புணர்வு செய்வதற்காகவே, கணவர் பலரை பணிகளில் சேர்த்துள்ளார்.
இந்த பாலியல் வன்புணர்வை மனைவி அறிந்திருக்கவில்லை என்றும், அவர் தீவிரமான போதைக்குள் தள்ளப்பட்டு இருந்ததாகவும் அவரின் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இதுதொடர்பாக, மொத்தமாக 92 பாலியல் வன்புணர்வுகள் 72 ஆண்களால் நடந்திருப்பதாகவும், அதில் 51 பேர் அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் விருப்பப்படி அனைத்து விசாரணைகளும் வெளிப்படையாகவே இருக்கும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மேலும், பாதிக்கப்பட்ட பெண் இந்த வழக்கின் மூலம் பரந்தளவிலான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் எனவும், அத்துடன் தனக்கு நேர்ந்த இந்த துயரம் வேறு யாருக்கும் நடந்துவிட கூடாது என விரும்புவதாகவும் அவருடைய வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.S
17 minute ago
38 minute ago
44 minute ago
49 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
38 minute ago
44 minute ago
49 minute ago