A.P.Mathan / 2012 மே 21 , பி.ப. 01:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடந்த 06ஆம் திகதி இரண்டு போட்டிகள் நடைபெற்றன. முதற் போட்டி 49ஆவது போட்டியாக மும்பை இந்தியன்ஸ், சென்னை சுப்பர் கிங்க்ஸ் அணிகளுக்கு இடையில் மும்பையில் நடைபெற்றது. நாணயசுழற்சியில் வெற்றி பெற்று முதலில் மும்பை இந்தியன்ஸ் அணி களத்தடுப்பில் ஈடுபட்டது. முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை சுப்பர் கிங்க்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 173 ஓட்டங்களை பெற்றது. இதில் டுவைன் பிராவோ 40 ஓட்டங்கள், முரளி விஜய் 41 ஓட்டங்கள். மும்பை இந்தியன்ஸ் அணி சார்பாக பந்து வீச்சில் லசித் மலிங்க, ஆர்பி.சிங் ஆகியோர் தலா 3 விக்கெட்களைக் கைப்பற்றினர். பதிலளித்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 174 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் சச்சின் டெண்டுல்கர் 74 ஓட்டங்கள். ரோஹித் ஷர்மா 60 ஓட்டங்கள். பந்து வீச்சில் சென்னை சுப்பர் கிங்க்ஸ் அணி சார்பாக பென் ஹில்பான்ஹோஸ், டுவைன் பிராவோ, ரவீந்தர் ஜடேஜா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகள். இந்த போட்டி மிக விறு விறுப்பாக நடைபெற்றது. மும்பை இந்தியன்ஸ் அணி பக்கமாக இருந்த போட்டி சென்னை சுப்பர் கிங்க்ஸ் அணியின் பக்கமாக மாறியது. இறுதி ஓவரில் வெற்றிக்கு 16 ஓட்டங்கள் தேவை. இறுதி 3 பந்துகளில் 14 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில் டுவைன் ஸ்மித் 6, 4, 4 என அடித்து மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வெற்றி பெற்றுக் கொடுத்து போட்டியின் நாயகனாக மாறினார்.8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago