A.P.Mathan / 2012 ஜூன் 14 , மு.ப. 07:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
மேற்கிந்திய துடுப்பாட்டத்தில் மர்லன் சாமுவேல்ஸ் மிக அபாரமாக துடுப்பெடுத்தாடினார். மற்றவர் சந்தர்போல். அவர் தன்னுடைய கடமையை சரியாக செய்பவர். டரின் சமி கன்னிச் சதத்தைப் பெற்று இன்னும் கொஞ்சம் ஓட்டங்களையும் பெற்று தன்னை நல்ல சகலதுறை வீரராக காட்டியுள்ளார். டீனோ பெஸ்ட், கிமர் ரோச் உபாதையடைய அணியில் சேர்த்துக்கொள்ளப்பட்டவர். அபார மீள் வருகை. இனி அணியில் வாய்ப்புக்கள் தொடரும் என்று சொல்லலாம். எதிர்பார்க்கப்பட்ட மேற்கிந்தியதீவுகளின் ஆரம்ப இளைய துடுப்பாட்ட வீரர்கள் ஏமாற்றியது போராட முடியாமல் போனது. டரின் பிராவோ முழுமையாக ஏமாற்றிவிட்டார். இந்த அணிக்குள் க்றிஸ் கெயில் வந்தால் ஆரம்பம் இன்னும் பலமாக மாறும். தினேஷ் ராம்டின் ஓரளவு பரவாயில்லை என்ற நிலை. பந்துவீச்சில் மேற்கிந்திய தீவுகள் அணியில் பிரகாசித்தவர் என்றால் கிமர் ரோச். அடுத்த படியாக சமி. இறுதி போட்டியில் சுனில் நரையன் விளையாடிய போதும் பந்து வீச பெரிதளவில் வாய்ப்பு கிடைக்கவில்லை. ரவி ராம்போல் எதுவும் சாதிக்கவில்லை என்ற நிலை. கிமர் ரோச், பிடல் எட்வேர்ட்ஸ் ஆகியோர் அணிக்குள் வந்தால் ராம்போலின் நிலை கேள்விதான். டீனோ பெஸ்ட் கும் ராம்போலிற்கும் போட்டி ஒன்று நிலவலாம்..jpg)
.jpg)
.jpg)
.jpg)


8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago