A.P.Mathan / 2012 ஜூலை 19 , மு.ப. 08:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
தென் ஆபிரிக்க அணி நல்ல அணியாக சமநிலையாக இருந்தாலும் அடிக்கடி தோல்விகளை சந்திப்பார்கள். அவர்களின் வேகப்பந்து வீச்சு மிகப்பலம். டேல் ஸ்டெயின், வெரோன் பிலாண்டர், மோர்னி மோர்க்கல் மூவரும் டெஸ்ட் போட்டிகளில் மிக அபாரமாக பந்து வீசுபவர்கள். சுழல்ப் பந்து வீச்சாளர் மிகப் பெரிய அளவில் சொல்வதற்கு இல்லை என்றாலும் இம்ரான் தாகிர் பரவாய் இல்லை ரகம். துடுப்பாட்டம் பலமாகவே உள்ளது. கிரேம் ஸ்மித், அல்விரோ பீற்றர்சன் இவர்கள் ஆரம்பத்தை சரியாக கொடுத்தால் பின்னால் உள்ளவர்கள் சிறப்பாக கொண்டு செல்வார்கள். அடுத்த இடங்களில் ஹசிம் அம்லா, ஜக்ஸ் கலிஸ், ஏபி.டி.வில்லியர்ஸ் ஆகியோர். இதில் வில்லியர்ஸ் அண்மைக்காலமாக சகலவித கிரிக்கெட் போட்டிகளிலும் கலக்கி வருகின்றனர். ஓட்டங்களை மிக லாபகரமாக பெற்று வருகின்றார். இந்த தொடரிலும் அவரை நிறைய எதிர்பார்க்கலாம். அது மட்டுமல்லாமல் இந்த தொடரில் தென் ஆபிரிக்காவிற்கு மிக கை கொடுக்க போபவரும் இவரே. ஏன், தொடரில் கூட நாயகனாகக் கூடிய வாய்ப்புகளும் உள்ளன..jpg)
.jpg)
.jpg)
.jpg)
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago