2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

அவுஸ்திரேலியாவில் இலங்கை

A.P.Mathan   / 2012 டிசெம்பர் 17 , மு.ப. 07:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலிய, இலங்கை அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டி தொடர் ஆரம்பித்துள்ளது. உலகின் தலை சிறந்த இரண்டு சுழல்ப் பந்து வீச்சாளர்களின் பெயரால் இந்த தொடர் அழைக்கப்படுகிறது. வோர்ன் - முரளி தொடர் என பெயர் சூட்டப்பட்டு இந்த தொடர் நடாத்தப்பட்டு வருகின்றது. கிண்ணம் கூட கைக்குள் அவர்கள் பந்தை எப்படி பிட்டிப்பார்களோ அந்த உருவில் அமைக்கபட்டுள்ளது. இரண்டு அணிகளுக்கும் இந்த தொடர் மிக முக்கியமாக அமையப்போகின்றது. சில மாற்றங்களின் பின்னர் அவுஸ்திரேலிய அணி களமிறங்கும் அதேவேளை, இலங்கை அணி அவுஸ்திரேலியாவிற்கு சவால் விடுக்கக் கூடிய அணி என்றாலும் டெஸ்ட் போட்டிகளில் இன்னும் அவுஸ்திரேலியாவில் சாதித்து காட்டாத நிலையில் ஏதாவது செய்து காட்ட வேண்டும் என்ற நிலை உள்ளது. இதில் மஹேல ஜெயவர்தனவின் தலைமையில் இறுதி டெஸ்ட் தொடர்.

ஆறாவது தடவையாக இலங்கை அணி அவுஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரில் பங்கு பற்றுகிறது. ஒரு தொடர் வெற்றியேனும் பெறவில்லை. அட இது பரவாய் இல்லை. ஒரு போட்டியிலேனும் வெற்றி பெறவில்லை. இலங்கை அணியின் ஆகக்கூடிய சாதனை 10 போட்டிகளில் 2 போட்டிகளை சமநிலையில் முடித்தமையே. 88ஆம் ஆண்டு முதல் தடவை அவுஸ்திரேலியா சென்றது இலங்கை அணி. இலங்கை அணி பலமாக இருந்த காலங்களில் கூட வெற்றி பெற முடியாமல் போனது. இப்போது இருக்கின்ற டெஸ்ட் அணி வித்தியாசமான பலமான அணியாக உள்ளது. அவுஸ்திரேலியாவில் சுழல்ப்பந்து பெரிய அளவில் எதுவும் செய்யப்போவதில்லை என்ற நிலையில் நுவான் குலசேகர, அஞ்சேலோ மத்தியூஸ் ஆகியோரின் மித வேகப் பந்துவீச்சு கை கொடுக்கும் என எதிர்பார்க்கலாம். சமின்ட எரங்கவின் பந்துவீச்சு கூட கை கொடுக்கும். இலங்கை அணிக்கு நம்பிக்கை தரும் பந்து வீச்சாளர்கள் இப்படி அமைந்தது குறைவு. அதை சரியாக பாவித்தால் வெற்றியை நோக்கி செல்ல முடியும் ஆரம்ப துடுப்பாட்டம் குறிப்பாக அவுஸ்திரேலிய ஆடுகளங்களில் அவர்களின் வேகப்பந்தை எதிர்கொள்ள போதுமானதா என்பது கேள்வியே. டில்ஷான் போர்மில் இல்லை என்பது இலங்கை அணிக்கு பின்னடைவு தருகிறது. அடுத்த இடங்களில் உள்ளவர்கள் மூவரையும் மலை போல் நம்பி இருக்கலாம். சங்ககாரவிற்கு இப்படி ஆடுகளங்கள் என்றால் போதும். மிக சிறப்பாக விளையாடுவர். மஹேல ஜெயவர்தன உலக தரமான வீரர் என்ற அந்தஸ்தை பெற்று விட்டார். எல்லா ஆடுகளங்களிலும் ஓட்டம் குவிக்கும் வீரர். நிலைத்து நின்றால் போதும். திலான் சமீவீர பற்றி கவலை கொள்ளத் தேவை இல்லை. அவர்தான் இலங்கை அணியின் ஹீரோவாக இந்த தொடரில் இருப்பார் என எதிர் பார்க்கலாம். அஞ்சலோ மத்தியூஸ் போர்மில் இருக்கின்றார். நிதானம் மாத்திரமே அவருக்கு தேவை. பிரசன்ன ஜெயவர்தனவின் விக்கெட் காப்பு பற்றி கேள்வி தேவை இல்லை. துடுப்பாட்டம் அவுஸ்திரேலிய ஆடுகளங்களில் எப்படி இருக்கும் என்பதே யோசிக்க வேண்டியதாக உள்ளது. இலங்கை அணி மீது அழுத்தங்கள் இல்லை. வென்றால் என்ன தோற்றால் என்ன மஹேல தலைவர் பொறுப்பில் இருந்து விலகுகிறார். ஒரு வெற்றியை பெற்றுக் கொடுத்து விலகினால் நிச்சயமாக இலங்கை அணியின் சிறந்த தலைவர் என்ற பெருமையை அவருக்கு வழங்க முடியும். சாதனையுடன் மஹேல விலகுவாரா?

அவுஸ்திரேலிய அணி கடந்த இரு தசாப்தகால சிறந்த துடுப்பாட்ட்ட வீரரை இழந்து களமிறங்குகிறது. ரிக்கி பொன்டிங் இல்லை என்பது எதிரணிகளுக்கு சந்தோசமான விடயம். அவரின் இடம் இன்னமும் நிரப்படவில்லை. நிரப்பவும் முடியாது. ஷேன் வொட்சன் நான்காம் இலக்கத்தில் துடுப்பெடுத்தாடப் போவது உறுதி. மூன்றாம் இடம் மைக்கல் கிளார்க்கிற்கு கிடைகிறது. ஐந்தாமிடம் மைக்கல் ஹஸ்ஸி. ஆரம்ப இடங்கள் உறுதியானவை. அண்மைக்காலமாக சிறப்பாக பிரகாசித்து வருபவர்கள் அவுஸ்திரேலிய பாணியில் ஒருவர் வேகமாக அடித்தாடுபவர் டேவிட் வோர்னர். மிக மெதுவாக ஆடும் மற்றவர் எட் கோவன். விக்கெட் காப்பாளர் மத்தியூ வேட். பிலிப் கியூஸ் விளையாடினால் அவருக்கு மூன்றாம் இடம் கிடைக்குமா அல்லது ஆறாம் இடம் கிடைக்குமா என்பது போட்டியின் பின்னரே தெரிய வரும். பந்துவீச்சில் நேதன் லையோன் நிச்சயம் விளையாடுவார். பீட்டர் சிடில், மிச்சேல் ஸ்டார்க் விளையாடுவர் என அதிகம் எதிர் பார்க்கலாம். பென்  ஹில்பன்ஹோஸ், மிச்சல் ஜோன்சன் ஆகியோருக்கிடையில் போட்டி ஒன்று இருக்கும். அவுஸ்திரேலிய அணி ஒவ்வொரு போட்டிக்கும் முன்னரே தன் அணியை அறிவிக்கும். எனவே யாராவது பிரகாசிக்கத் தவறினால் மாற்றப்பட வாய்ப்புக்கள் உள்ளன. 

இப்படி முழுமையாக இன்னும் இல்லாத ஓர் அணியாக இருந்து வருகிறது. தென் ஆபிரிக்க அணியுடன் தொடர் தோல்வி. இரு சமநிலை முடிவுகள். ஒரு தோல்வி என்ற நிலையில் இந்த தொடரில் பெரிய வெற்றி ஒன்றைபெற வேண்டும் என்ற நிலையில் உள்ளது அவுஸ்திரேலிய அணி. அழுதும் அவர்கள் மீது உள்ளது. இலங்கை அணி அதை சரியாக பாவித்து அழுத்தம் கொடுத்தால் ஒரு வெற்றியை தானும் பெற முடியும். மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரில் ஒரு வெற்றியை இலங்கை அணி பெற்றாலே தொடர் வெற்றியை பெற்றமைக்கு சமனாகிவிடும். இலங்கை அணிக்கு பெரும் நெருக்கடியை தரும் விடயமாக இருக்கப்போவது காலநிலை. கடும் குளிர் காலநிலை. அதற்கு ஏற்ப ஆடுகளங்கள் இருக்கப்போகின்றன. பந்துகள் மிக அதிகமாக மேலெழும் ஸ்விங் ஆடுகளங்களிற்கு இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர்கள் எப்படி தாக்குப் பிடிக்கப் போகின்றனர் என்பதுதான் இலங்கை அணியின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கப் போகின்ற விடயம். 

இலங்கையின் மூத்த வீரர்களுக்கு சில வேளைகளில் இது அவுஸ்திரேலியாவிற்கு சென்றுள்ள கடைசி தொடராக கூட அமையலாம். முக்கியமாக குமார் சங்ககார, மஹேல ஜெயவர்தன,  திலகரத்ன டில்ஷான், திலான் சமரவீர ஆகியோரே அவர்கள்.

அவுஸ்திரேலியாவில் வைத்து இலங்கை அணியின் பெறுதிகள்
துடுப்பாட்டம்
அரவிந்த டி சில்வா         6    11     425     167    38.63        43.63    1    2
குமார் சங்ககார                 3     6      391    192    65.16        57.83    1    3
மார்வன் அத்தபத்து         4     8      328    133    41.00        40.84    1    2
அர்ஜுன ரணதுங்க           5      9     324      55    40.50        44.26    0    2
சனத் ஜயசூரிய                  5    10     313    112    31.30        60.54    1    0
அசங்க குருசிங்க              5      9     305    143    33.88        40.07    1    0

பந்துவீச்சு
சமிந்த வாஸ்                  6    10     238.1    709    17    31/5      41.70    2.97    84.0
உப்புல் சந்தன                2      4        61.4    270    12    101/5    22.50    4.37    30.8
லசித் மாலிங்க               3      6     110.3    481    12    42/4      40.08    4.35    55.2
ருமேஸ் ரத்நாயக்க     1       2       54.4    189       8    66/6      23.62    3.45    41.0

அவுஸ்திரேலியாவில் வைத்து முரளிதரன் பெரியளவில் சாதிக்க முடியவில்லை. போட்டிகளில் விளையாடியதும் குறைவு. பந்தை வீசி எறிகிறார் என்ற சர்ச்சை உருவாகியது இதற்கு ஒரு காரணமாக அமைந்தது. அதன் பின் உபாதை காரணமாகவும் அவரால் அங்கே விளையாடாமல் போனது. 
முத்தையா முரளிதரன்     4    5    208.0    748    7    170/2    106.85    3.59    178.2

இலங்கை அணிக்கு எதிராக அவுஸ்திரேலியாவில் வைத்து அவுஸ்திரேலிய அணியின் பெறுதிகள்
துடுப்பாட்டம்
ஸ்டீவ் வோ                       5    8    649    170    129.80        54.17    3    3
மார்க் ரெய்லர்                   5    9    463    164      57.87        50.00    2    1
மைக்கல் ஹஸ்ஸி        2    3    299    133     99.66        59.05    2    0
ரிக்கி பொன்டிங்                6    9    400      96      5.00        52.98    0    4
மத்தியூ ஹெய்டன்         4    7    381    132    54.42        62.56    2    0
டேவிட் பூன்                       6    9    332    110    36.88        41.50    1    1   
மைக்கல் ஸ்லேட்டர்     3    5    309    219    77.25        60.11    1    1

பந்துவீச்சு
கிலென் மக்ரத்                   5    10    235.5    609    31    37/5    19.64    2.58    45.6
ஷேன் வோர்ன்                  5    10    265.3    713    22    70/4    32.40    2.68    72.4
பிரட் லீ                                  2    4    94.4    281    16    26/4    17.56    2.96    35.5
மேர்வ் கியூஸ்                    3    5    131.2    407    16    67/5    25.43    3.09    49.2
கிரெய்க் மக்டெமொட்    4    8    131.4    393    13    44/3    30.23    2.98    60.7
போல் ரெய்பில்                 2    4    74.1    218    9    39/5    24.22    2.93    49.4
கிரேம் லப்ரூய்                  3    5    132.1    471    9    133/5    52.33    3.56    88.1
ஸ்டீவ் வோ                        5    4    53.0    87    8    33/4    10.87    1.64    39.7
மைக்கல் கஸ்பரோவிக்ஸ் 2    4    67.4    201    8    39/7    25.12    2.97    50.7
மிச்சல் ஜோன்சன்            2    4    82.0    241    8    101/3    30.12    2.93    61.5

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X