Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Janu / 2024 ஓகஸ்ட் 19 , மு.ப. 11:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாண கடலில் சுமார் 100 அடி ஆழத்தில் கடலட்டை பிடித்துக் கொண்டிருந்த நபர் திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.
புத்தளம் பகுதியை சேர்ந்த 40 வயதுடைய சேவுதாதின் முகமதுதாவீன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் வடமராட்சி கிழக்கு , நாகர்கோவில் கடல் பகுதியில் சிலிண்டர் பயன்படுத்தி சுமார் 100 அடி ஆழத்தில் கடலட்டை பிடித்துக் கொண்டிருந்த வேளை , நெஞ்சு வலிப்பதாக கூறி , கடலின் மேல் பகுதிக்கு வந்துள்ளார். அதனையடுத்து சக தொழிலாளிகள் அவரை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் , அங்கிருந்து யாழ் . போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற பின்னர் அவர் உயிரிழந்துள்ளார்.
எம் . றொசாந்த்
37 minute ago
49 minute ago
58 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
49 minute ago
58 minute ago