2026 ஜனவரி 23, வெள்ளிக்கிழமை

116 கிலோ கஞ்சா பறிமுதல்

Janu   / 2026 ஜனவரி 20 , பி.ப. 04:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

ராமநாதபுரம் மாவட்ட கடல் வழியாக இலங்கைக்கு  கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் மற்றும் மஞ்சள் உள்ளிட்டவை  அதிக அளவில் கடத்தப்பட்டு வருகிறது. இதை தடுக்க அனைத்து பாதுகாப்பு பிரிவினரும் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டு அவ்வப்போது கடத்தல் பொருட்களை பறிமுதல் செய்து குற்றவாளிகளை கைது செய்து வருகின்றனர்.

இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே கடல் வழியாக இலங்கைக்கு கஞ்சா கடத்த திட்டமிட்டு இருப்பதாக சுங்க துறையினருக்கு ரகசிய தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.

இதனை தொடர்ந்து சுங்கத்துறை அதிகாரிகள் அந்த பகுதியில் கடந்த சில நாட்களாக தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த நிலையில் செவ்வாய்க்கிழமை (20)  அதிகாலை  அந்த பகுதியைச் சேர்ந்த ஒருவர், தோப்பு வலசை கடற்கரை பகுதியில் மர்ம வாகனம் ஒன்றில் வந்த சிலர் பொதிகளை  இறக்கி வைத்து விட்டு சென்றிருப்பதாக தகவல் தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து சுங்கத்துறை அதிகாரிகள் குறித்த பகுதிக்கு சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளதுடன் இதன்போது இலங்கைக்கு கடத்துவதற்காக தோப்புவலசை கடற்கரை பகுதியில் ஆங்காங்கே பதுக்கி வைக்கப்பட்டிருந்த கஞ்சா பொட்டலங்களை அதிகாரிகள் கைப்பற்றினர்.

இந்த பொட்டலங்களை  பரிசோதித்துப் பார்த்த போது அதிலிருந்து 40 இலட்சம் ரூபாய் பெறுமதியுடைய 116 கிலோ கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

இந்த கஞ்சாவை மர்ம வாகனத்தில் கொண்டு வந்து போட்டு சென்றவர்கள் யார் என்பது குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 எஸ்.ஆர்.லெம்பேட்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X