Janu / 2023 செப்டெம்பர் 20 , பி.ப. 05:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
முல்லைத்தீவு மாங்குளம் பகுதியில் கடந்த 2016ம் ஆண்டு பதினாறு வயது சிறுமி ஒருவரை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தினார் எனக் குற்றஞ்சாட்டப்பட்டவரை குற்றவாளியாக இனங்கண்ட நீதிமன்றம் அவருக்கு பத்து வருட கடூழிய சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மூன்று இலட்சம் ரூபாய் நட்டஈடு செலுத்துமாறும் கிளிநொச்சி மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முல்லைத்தீவு மாங்குளம் பகுதியில் கடந்த 2016ம் ஆண்டு பதினாறு வயதுடைய சிறுமி ஒருவரை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய ஒருவரை மாங்குளம் பொலிஸார் கைது செய்து மன்றில் முன்னிலைப்படுத்தியதுடன் தொடர்ந்து வழக்கு விசாரணைகள் நடைபெற்றன
இந்நிலையில் குறித்த வழக்கானது புதன்கிழமை(20) பகல் கிளிநொச்சி மேல் நீதிமன்றத்தில் நீதிபதி முன்னிலையில் தீர்ப்புகாக எடுத்துக் கொள்ளப்பட்டது
சிறுமியின் வாக்கு மூலமும் சாட்சியங்கள் மூலமும் சட்ட வைத்திய அதிகாரியின் மருத்துவ அறிக்கை என்பவற்றின் மூலம் மன்று குறித்த நபரை குற்றவாளியாக இனங்கண்டு மேற்படி தீர்ப்பை வழங்கியுள்ளது.
இவ்வாறு மேற்படி சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த நபருக்கு பத்து ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுதுடன் பத்தாயிரம் ரூபாய் தண்டப்பணம் செலுத்துமாறும் தவறும் பட்சத்தில் 12 மாத கால சாதாரண சிறைத்தண்டனையும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மூன்று இலட்சம் ரூபாய் இழப்பீடு செலுத்துமாறும் தவறும் பட்சத்தில் 24 மாத கால சாதாரண சிறைத்தண்டனையும் அனுபவிக்க வேண்டும் என்றும் கிளிநொச்சி மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது
14 minute ago
19 minute ago
27 minute ago
33 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
19 minute ago
27 minute ago
33 minute ago