2025 மே 13, செவ்வாய்க்கிழமை

47 கி.கி கஞ்சாவுடன் சந்தேக நபர் கைது

Freelancer   / 2023 நவம்பர் 07 , மு.ப. 10:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

பு.கஜிந்தன்

கிளிநொச்சியில் 47 கிலோகிராம் கஞ்சாவுடன் சந்தேகநபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைவாக மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் குறித்த கைது இடம்பெற்றுள்ளது.

கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கனகாம்பிகைக்குளம் பகுதியில் உள்ள தனியாரின் வீட்டில் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. 

இதனையடுத்து நேற்று இரவு (06) சோதனை மேற்கொண்ட பொலிஸார் 47 கிலோகிராம் கஞ்சாவை மீட்டுள்ளதுடன்இ சந்தேசத்தின் பேரில் 44 வயதுடைய ஒருவரை கைது செய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தொடந்தும் விசாரணை இடம்பெற்று வரும் நிலையில்இ சான்று பொருட்களையும்இ சந்தேக நபரையும் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். M 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X