Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 12, திங்கட்கிழமை
Mayu / 2024 ஜனவரி 17 , மு.ப. 10:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
மன்னார் தாழ்வுபாடு பகுதியிலுள்ள வீடொன்றில் ஒரு தொகுதி போதை குளிசைகளுடன் செவ்வாய்க்கிழமை (16) குடும்பஸ்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த வீட்டில் சந்தேகத்திற்கிடமான வகையில் சிலர் தங்கியிருப்பதாக இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மன்னார் பிரதேச பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினருடன் இணைந்து மன்னார் தாழ்வுபாடு பகுதியிலுள்ள வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது குறித்த 520 சட்டவிரோத போதை குளிசைகள் மீட்கப்பட்டுள்ளது.
மேலும், குறித்த நபரிடம் மேற்கொண்ட விசாரணையின் போது இந்தியாவில் இருந்து கடல் வழியாக குறித்த குளிசைகள் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கைது செய்யப்பட் நபரிடமிருந்து விசாரணைகளின் பின்னர் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த மன்னார் பொலிஸார் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
எஸ்.ஆர்.லெம்பேட்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
2 hours ago
2 hours ago