2025 மே 13, செவ்வாய்க்கிழமை

அ​லெக்ஸின் நண்பருக்கு பிணை

Janu   / 2023 நவம்பர் 21 , பி.ப. 02:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருட்டுச் சம்பவம் தொடர்பில் அண்மையில் வட்டுக்கோட்டை பொலிஸாரினால் கைது செய்து நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட சந்தேக நபர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

விளக்கமறியலில் வைக்கப்பட்ட கைதி உயிரிழந்த நிலையில், குறித்த வழக்கு புதன்கிழமை (21) மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் விளக்கமறியலில் இருந்த உயிரிழந்தவருடன் கைதாகி தடுத்து வைக்கப்பட்டவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

குறித்த வழக்கை வட்டுக்கோட்டைப் பொலிஸாரிடமிருந்து மாற்றப்பட வேண்டும் என்ற சட்டத்தரணிகளால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையும் நீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த வழக்கில் சந்தேகநபர் சார்பில் சட்டத்தரணி சுகாஸ் உள்ளிட்ட பலரும் ஆஜராகியிருந்துள்ளதுடன், திருட்டு சம்பவம் தொடர்பாக சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டு வட்டுக்கோட்டை பொலிஸாரினால் சித்திரவதைக்கு உள்ளானமை தொடர்பாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

எம்.றொசாந்த்

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X