2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

அலுமாரிக்குள் கசிப்பு போத்தல்கள் ; பெண்ணொருவர் கைது

Janu   / 2023 டிசெம்பர் 26 , பி.ப. 03:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணத்தில் வீடொன்றில் அலுமாரிக்குள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கசிப்பு போத்தல்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.  

சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றில் கசிப்பு விற்பனை இடம்பெறுவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், குறித்த வீட்டை சோதனையிட்டபோது, வீட்டினுள் இருந்த அலுமாரி ஒன்றிலிருந்து, சுமார் 30 கசிப்பு போத்தல்கள் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், வீட்டிலிருந்த பெண்ணையும் கைது செய்துள்ளதுடன், இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். 

எம். றொசாந்த் 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .