2025 மே 13, செவ்வாய்க்கிழமை

அலெக்ஸிற்கு நீதி கோரி போராட்டம்

Janu   / 2023 டிசெம்பர் 03 , பி.ப. 04:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

வட்டுக்கோட்டை பொலிஸாரின் சித்திரவதைக்குள்ளாகி  உயிரிழந்த நாகராசா அலெக்ஸிற்கு நீதி கோரி வட்டுக்கோட்டையில் கண்டனப் போராட்டமொன்று ஞாயிற்றுக்கிழமை  (03)  முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன் போது வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு செல்லும் வீதியில் பொலிஸார் குவிக்கப்பட்டு,  வீதித் தடைகள் அமைக்கப்பட்டுள்ளது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் வட்டுக்கோட்டைச் சந்தியில் பிற்பகல் 3 மணியளவில் உயிரிழந்த இளைஞனுக்கு அஞ்சலி செலுத்தி போராட்டம் ஆரம்பமானது.

நாகராசா அலெக்ஸின் மரணத்துக்கு நீதி கோரியும் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் தொடர்ச்சியாக அரங்கேற்றப்பட்டு வரும் சட்ட விரோத சித்திரவதைகளை நிறுத்தக் கோரியும் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நிதர்ஷன் வினோத்

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X