Janu / 2025 ஜூலை 24 , பி.ப. 02:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
மன்னார் - நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் நானாட்டான் முருங்கன் வீதியில் வசித்து வரும் ஓய்வு பெற்ற ஆசிரியை ஒருவரின் வீட்டிற்குள் முகமூடியுடன் புகுந்த ஒருவர் கத்தியை காட்டி மிரட்டி கழுத்திலிருந்த தங்கச் சங்கிலியை அபகரித்துச் சென்றுள்ள சம்பவம் புதன்கிழமை (23) மாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
குறித்த ஆசிரியை, வீட்டில் தனிமையில் இருந்த போது பின் பக்க வேலியால் வீட்டுக்குள் புகுந்த திருடன் குறித்த வீட்டின் அருகில் வங்கிகளும் கடைகளும் இருந்த போதும் சத்தம் போடக் கூடாது என்று கத்தி முனையில் மிரட்டி ஆசிரியையின் கழுத்தில் அணிந்திருந்த 7 லட்சம் ரூபாய் பெறுமதியுடைய இரண்டரை(2-1/2) பவுன் தங்கச் சங்கிலியை அபகரித்துள்ளதுடன் ஆசிரியை கையில் அணிந்திருந்த வளையல்களை கழற்ற முடியாமல் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
இச் சம்பவம் தொடர்பாக முருங்கன் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
எஸ்.ஆர்.லெம்பேட்
21 minute ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
3 hours ago
3 hours ago