2025 மே 14, புதன்கிழமை

ஆதிவாசிகள் யாழுக்கு விஜயம்

Freelancer   / 2023 ஒக்டோபர் 22 , மு.ப. 11:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

மஹியங்கனையில் வசித்துவரும் ஆதிவாசிகள் முதல் தடவையாக யாழ் மாவட்டத்திற்கு (21)ஆம் திகதி சனிக்கிகழமை உத்தியோகபூர்வமான விஜயத்தினை மேற்கொண்டனர்.

இலங்கையின் ஆதிவாசிகளின் தலைவர் ஊருவரிகே வன்னில அத்தோவரின் தலைமையிலான 70 ஆதினவாசிகள் குழுவினரே முதல் தடவையாகவருகை தந்துள்ளனர்.

இந்நிலையில் இவர்களுக்கான விருந்தோம்பல் நிகழ்வு நாச்சிமார் கோவிலுக்கு அருகாமையில் அமைந்துள்ள தனியார் விடுதியில் இடம்பெற்றது.

இதனை தொடர்ந்து பிரசித்தி பெற்ற இடங்களான யாழ் மத்திய நாகவிகாரைக்கும்,நயினாதீவு நாகதீபம் விகாரைக்கும், சென்று வழிபாடுகள் செய்து, வரலாற்று சின்னங்களையும் சுற்றி பார்வையிட்ட பின்ன மீண்டும் தமது இருப்பிடமான மஹியங்கனைக்கு சென்றுள்ளனர்.

இதில் யாழ்ப்பாண மாவட்ட பிரதிப்பொலிஸ் மா அதிபர் மஞ்சுள செனவிரட்ன, பொலிஸார், ஊடகவியாளர்கள் பலரும் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X