R.Tharaniya / 2025 ஜூலை 08 , மு.ப. 10:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிளிநொச்சி ஆனையிறவு பகுதியில் டிப்பருடன் வேன் மோதி பாரியளவான விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது .
குறித்த விபத்து திங்கட்கிழமை (07) அன்று மாலை 5.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது
யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா சென்ற டிப்பருடன் கிளிநொச்சியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த வேன் நேருக்கு நேர் மோதி பாரியளவான விபத்து ஏற்பட்ட நிலையில் வேனில் பயணித்த பயணிகள் எந்த வித உயிர் சேதங்களும் இன்றி பலத்த காயங்களுடன் உயிர் தப்பித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன
பலத்த காயம் அடைந்த பயணிகள் சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

38 minute ago
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
2 hours ago
3 hours ago
3 hours ago