Editorial / 2024 டிசெம்பர் 03 , பி.ப. 05:49 - 0 - {{hitsCtrl.values.hits}}

நிதர்ஷன் வினோத்
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் 18 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கில், திங்கட்கிழமை (02) மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.
குறித்த மீன்பிடி படகு சர்வதேச கடல் எல்லைக் கோட்டை தாண்டி இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்துள்ளது. அவர்கள் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபடுவதைக் கண்டறிந்த இலங்கை கடற்படையினர் 18 இந்திய மீனவர்களுடன் 01 இந்திய மீன்பிடி படகு கைப்பற்றியுள்ளனர்.
இந்திய மீனவர்களுடன் கைப்பற்றப்பட்ட படகு காங்கேசன்துறை துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டு, சட்ட நடவடிக்கைக்கு இலங்கை கடலோர காவல்படை வடக்கு பிராந்திய பணிப்பாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago