2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

இந்திய மீனவர்கள் உடனடியாக விடுதலை

Freelancer   / 2023 நவம்பர் 19 , மு.ப. 09:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

பு.கஜிந்தன்

யாழ்ப்பாணம், பருத்தித்துறைக் கடற்பரப்பில் நேற்றையதினம் (18) திகதி சனிக்கிழமை இரண்டு படகுகளுடன் வரப்பட்ட 22 இந்திய மீனவர்கள் கைது செய்யப்ட்டுள்ளனர்.

இதன்போது, கைது செய்யப்பட்ட மீனவர்களுடன் படகுகளும் இந்திய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் தலையீட்டின் பேரில் உடனடியாக விடுவிக்கப்பட்டுத் தமிழகத்துக்குப் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

பருத்தித்துறைக் கடற்பரப்பில் இரண்டு படகுகளில் அத்துமீறி நுழைந்து, கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றத்துக்காக நேற்று மதியம் 22 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். 

மீனவர்களின் கோரிக்கையின் பேரில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைத் தொடர்பு கொண்ட இந்திய நிதி அமைச்சர், மீனவர்களின் விடுதலை தொடர்பில் நடவடிக்கை எடுக்கக் கோரியுள்ளார்.

இதற்கமைய குறித்த 22 மீனவர்களும் இன்று (19) அதிகாலை தமிழகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். M 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X