Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Janu / 2023 நவம்பர் 02 , பி.ப. 02:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பாவனையாளர்களுக்கு மாதாந்தம் வழங்கப்பட்டு வந்த நீர் கட்டணச் சிட்டை நவம்பர் மாதம் (01.11.2023) தொடக்கம் வழங்கப்படமாட்டாது எனவும் அதற்கு பதிலாக குறுந்தகவல் (SMS) மற்றும் மின்னஞ்சல் (e.Bill) ஊடாகவே மாதாந்த நீர்க் கட்டண விபரங்கள் பாவனையாளர்களுக்கு அனுப்பப்படும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
சுற்றுச் சூழல் நன்மை, செலவுகளைக் குறைத்தல், தொழிநுட்ப வசதிகளை பயன்படுத்தல் போன்ற காரணங்களை அடிப்படையாகக் கொண்டு இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அதன்படி பாவனையாளர்களுக்கு தொலைபேசி மூலம் கட்டணங்களைச் செலுத்திக் கொள்ள முடியும் எனவும் தெரிவித்துள்ளனர்.
மேலும் நீர்ப் பாவனையாளர்கள் தங்களின் தொலைபேசி இலக்கம் அல்லது மின்னஞ்சல் முகவரிகளைச் சரியாக பதிவு செய்துகொள்ளாதவர்கள் நீர்மானி வாசிப்பாளர்கள் சமூகம் தருகின்ற போது அவர்களுடன் தொடர்பு பதிவு செய்துகொள்ள முடியும் எனவும் இது தொடர்பில் மேலதிக விபரங்களை பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் 1939 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மு.தமிழ்ச்செல்வன்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago