2025 ஜூலை 07, திங்கட்கிழமை

இரணைப்பாலையில் கஞ்சா சிக்கியது

Freelancer   / 2023 நவம்பர் 26 , மு.ப. 09:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதுக்குடியிருப்பு  - இரணைப்பாலை பகுதியில் இளைஞனொருவரிடமிருந்து நேற்றைய தினம் (25​) 1கிலோ 570கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில் இரணைப்பாலை பகுதியிலுள்ள வீட்டிற்கு சென்ற பொலிஸார் வீட்டினுள் சோதனை நடவடிக்கையினை மேற்கொண்ட போது அவரது வீட்டு அறையில் பொதி செய்யப்பட்ட வகையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கேரளா கஞ்சாவினை புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஹெரத் தலைமையிலான பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். 

இரணைப்பாலை பகுதியை சேர்ந்த 27வயதுடைய இளைஞனை கைது செய்யப்பட்டுள்ளதோடு மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

சண்முகம் தவசீலன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .