2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

இலச்சினை பயன்படுத்தினால் , சட்ட நடவடிக்கை

Janu   / 2024 மார்ச் 12 , பி.ப. 12:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் இலச்சினையை உரிய  அனுமதியின்றி பயன்படுத்தினால், சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

 யாழ்ப்பாணப் பல்கலைக்கழக  பொதுப் பட்டமளிப்பு விழா எதிர்வரும் 14 ஆம் திகதி தொடக்கம் 16ஆம் திகதி வரையிலான மூன்று தினங்களில் நடைபெறவுள்ளது . 

அதன் போது,  ஒளிப்பட, வணிக மற்றும் விற்பனை நிலையங்களினால் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக உத்தியோகபூர்வ இலட்சினையானது வியாபார நோக்கில் உரிய அனுமதிகள் எவையுமின்றி பொதுவெளிகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

அவ்வாறான செயற்பாடுகள் பல்கலைக்கழக நிர்வாகத்தினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படக் கூடிய குற்றமொன்றாகும். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் இலட்சினையானது பல்கலைக்கழக மூதவையின் (Senate) அனுமதியுடனே உபயோகிக்கப்படுதல் வேண்டும். ஆகவே அவ்வாறான செயற்பாடுகளை தவிர்த்துக் கொள்ளுமாறு வேண்டுகின்றோம் எனவும்  மேலதிக விபரங்களிற்கு  யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் த்திற்கு நேரில் வந்தோ , 021 221 8100 எனும் தொலைபேசி இலக்கம் ஊடாகவோ அல்லது info@univ.jfn.ac.lk எனும் மின்னஞ்சல் வாயிலாகவும் தொடர்பு கொள்ளுமாறு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிவித்துள்ளது.

எம்.றொசாந்த் 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X