Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 24, சனிக்கிழமை
Freelancer / 2022 ஓகஸ்ட் 06 , மு.ப. 07:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
மன்னார் நிருபர்
உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதலின் போது நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட கைது நடவடிக்கைகளில் மன்னார் மாவட்டத்தில் பள்ளி முனை பகுதியை சேர்ந்த நபர் ஒருவரும் தள்ளாடி இராணுவ முகாம் முன்னாள் இராணுவ அதிகாரி ஒருவருமாக இருவர் பயங்கர வாத தடை சட்டத்தில் கைது செய்யப்பட்டிருந்தனர்.
தனது உடமையில் பீரங்கிக்கு பயன்படுத்தும் திரியை வைத்திருந்தார் என்ற அடிப்படையில் பள்ளிமுனை யை சேர்ந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
அவரிடம் பெறப்பட்ட வாக்கு மூலத்தின் அடிப்படையில் அவருக்கு குறித்த பீரங்கி திரியை வழங்கிய குற்ற சாட்டில் தள்ளாடி இராணுவ முகாமை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் ஒருவரும் கடந்த 2019 ஆண்டு பயங்கரவாத தடைச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில் இருவரையும் விடுவிக்க கோரி அல்லது பொலிஸார் ஊடாக பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை நீக்கக் கோரி சட்டத்தரணி எஸ்.டினேசன் கடந்த இரண்டு வருடங்களாக சமர்ப்பனங்கள் மேற்கொண்டு வந்த நிலையில் நீண்ட காலமாக அவர்களுக்கு பிணை நிராகரிக்கப்பட்டு இருந்ததுடன் சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனை பெற்று அவர்களை விடுவிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் சட்டத்தரணி எஸ்.டினேசன் ஊடாக சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு பல முறை நினைவூட்டல் கடிதங்கள் அனுப்பப்பட்டிருந்த தோடு நேரடியாகவும் சட்டமா அதிபர் திணைக்களத்தில் ஆலோசனை கோரப்பட்டிருந்தது.
இருப்பினும் குறித்த வழக்கு காலம் தாழ்த்தப்பட்டு வந்த நிலையில் இலங்கை உயர் நீதிமன்றத்தில் மனித உரிமை மீறல் வழக்கு தாக்கல் செய்ய தயார் நிலையில் இருந்த பொழுது குறித்த வழக்கு தொடர்பான விபரங்களை பரிசீலித்த சட்டமா அதிபர் திணைக்களம் குறித்த இருவரையும் விடுவிப்பதற்கான கடிதத்தை மன்னார் நீதவான் நீதி மன்றத்திற்கு கடந்த வியாழக்கிழமை அனுப்பி வைத்திருந்தது.
இந்த நிலையில் இன்று (5) குறித்த வழக்கு மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் எடுத்து கொள்ளப்பட்ட நிலையில் சம்பந்தப்பட்ட இருவரையும் வழக்கில் இருந்து முழுமையாக விடுவிக்க மன்னார் நீதவான் உத்தரவிட்டார். (a)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
4 hours ago
6 hours ago