Janu / 2026 மார்ச் 02 , பி.ப. 04:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணம், குடத்தனை வலிக்கண்டிப் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் தனிமையில் வசித்து வந்த இளைஞர் ஒருவர், தன் உயிரை மாய்த்துக் கொண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அதே பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய கணேசலிங்கம் ஜதுர்சன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
திங்கட்கிழமை (02) காலை குறித்த வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியதையடுத்து, அக்கம் பக்கத்தினர் பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளனர். அதனையடுத்து அங்கு சென்ற பொலிஸார், அழுகிய நிலையில் காணப்பட்ட சடலத்தை மீட்டுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த கரவெட்டி திடீர் மரண விசாரணை அதிகாரி வேலுப்பிள்ளை பாஸ்கரன் விசாரணைகளை மேற்கொண்டார். பின்னர், சடலத்தை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்குமாறும், பிரேத பரிசோதனை அறிக்கையை சமர்ப்பிக்குமாறும் மருதங்கேணி பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
இச்சம்பவம் குறித்து மருதங்கேணி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
எஸ். தில்லைநாதன்
8 hours ago
8 hours ago
02 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
02 Mar 2026