2025 மே 06, செவ்வாய்க்கிழமை

உயிரை மாய்த்துக் கொண்ட முதியவர்

Janu   / 2024 ஜூலை 30 , பி.ப. 01:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி மேற்கு பகுதியை சேர்ந்த 80 வயதுடைய கந்தையா செல்லச்சாமி என்ற முதியவர் செவ்வாய்க்கிழமை (30) காலை தன் உயிரை மாய்த்து கொண்டுள்ளார்.

குறித்த முதியவரும் அவரது மனைவியும் சம்பவம் நிகழ்ந்த வீட்டில் வசித்து வந்துள்ள நிலையில் அவரது மனைவி செவ்வாய்க்கிழமை (30) காலை  வெளியே சென்றிருந்த போது இவ்வாறு உயிரை மாய்த்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

பு.கஜிந்தன்

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X