2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

உறவுகளை அச்சுறுத்திய ‘ஊடகவியலாளர்’

Freelancer   / 2022 டிசெம்பர் 21 , மு.ப. 02:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

சண்முகம் தவசீலன்

ஊடகவியலாளர்  எனத் தன்னை அடையாளப்படுத்தியவாறு சிவில் உடையில் வந்த பொலிஸ், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை அச்சுறுத்தியதுடன் ஊடகவியலாளர்களுடனும்  முரண்பட்டுக்கொண்டார்.

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்துக்கு முன்னால் நேற்று முன்தினம் (19) வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் எதிர்ப்பு போராட்டம் இடம்பெற்றபோது, சிவில் உடையில்  வந்து,  பொலிஸ் ஊடகவியலாளர் எனத் தெரிவித்த ஒருவர்,  காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை தொடர்ச்சியாக வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்து அச்சுறுத்தல் விடுத்திருந்த நிலையில், உறவுகள் அவரை வீடியோ புகைப்படம் எடுக்க வேண்டாம் என தொடர்ச்சியாக தெரிவித்த போதும், அவர் உறவுகளை வீடியோ, புகைப்படம் எடுத்து அச்சுறுத்தும் செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்தார்.

குறித்த நபர், வீடியோ மற்றும் புகைப்பட பதிவுகளை மேற்கொண்டு மக்களை அச்சுறுத்தியது மாத்திரமல்லாமல், ஊடகவியலாளர்களுடனும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு ஊடகவியலாளர்களை அச்சுறுத்தும் விதத்திலும் செயற்பட்டிருந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .