2025 மே 12, திங்கட்கிழமை

ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் வாக்குவாதம்

Mayu   / 2023 டிசெம்பர் 28 , பி.ப. 02:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய கடற்றொழிலாளர்கள் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறல் விவகாரம் தொடர்பாக இன்றைய தினம் (28) யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நடைப்பெற்றது.

குறித்த கூட்டத்தில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்ப்பட்டது.

இதன்போது கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களை விமர்சித்து உரையாற்றிக் கொண்டிருந்த நபர் தீடீரென கூட்டத்திற்கு நடுவே வந்ததால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.



இதனையடுத்து அங்கு வந்த  பாதுகாப்பு உத்தியோகத்தர்களால் நிலைமை கட்டுக்குள் வந்ததோடுஅமைச்சர், கட்சி ஆதரவாளர்களை அழைத்து கட்சி கூட்டத்தை நடத்துவதாக பாராளுமன்ற உறுப்பினர்கள், குற்றம் சாட்டினர்.

அமைச்சர் குறித்த நபர் பொது அமைப்பை சேர்ந்தவர்கள் என தெரிவித்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன், தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் செல்வராஜா கஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எம் றொசாந்த் ,  நிதர்ஷன் வினோத் 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X