Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Janu / 2024 ஏப்ரல் 18 , பி.ப. 12:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணம், சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் பெண்ணொருவர் வீட்டில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த வீட்டை புதன்கிழமை (17) மாலை சுற்றி வளைத்த போது , வீட்டினுள் விற்பனைக்காக கசிப்பினை சிறு சிறு பொதிகளாக பொதி செய்து கொண்டிருந்த நிலையில் பெண் கைது செய்யப்பட்டுள்ளார்
சுன்னாகம் பகுதியை சேர்ந்த 52 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக தெரியவந்துள்ளது .
மேலும், குறித்த பெண்ணிடம் இருந்து சுமார் 10 லீட்டர் கசிப்பு கைப்பற்றியுள்ளதாகவும் இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர் .
எம்.றொசாந்த்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
36 minute ago
40 minute ago
46 minute ago