2025 மே 12, திங்கட்கிழமை

கஞ்சாவுடன் கைதானவர்களுக்கு 27,000 ரூபாய்

Janu   / 2024 ஜனவரி 11 , பி.ப. 03:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிளிநொச்சி பகுதியில் 5 கிராம் மற்றும் 6 மில்லி கிராம் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட மூவருக்கு 27,000 ரூபாய் தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி பகுதியில் ஐந்து மில்லி கிராம் கஞ்சா உடமையில் வைத்திருந்த இரண்டு பேரைக் கைது செய்த கிளிநொச்சி பொலிஸார் அவர்களுக்கு எதிராக வழக்குகளைப் பதிவு செய்து கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றில் தனித்தனியாகப் புதன்கிழமை (10) ஆஜர்படுத்தியபோது தலா பத்தாயிரம் ரூபாய் படி இருவருக்கும் இருபதாயிரம் ரூபாய் தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று ஆறு மில்லி கிராம் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட நபரை  நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது ஏழாயிரம் ரூபாய் தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.

யது பாஸ்கரன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X