Janu / 2026 மார்ச் 31 , மு.ப. 11:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
மன்னார், வங்காலை கடற்பகுதியில் கடற்படையினர் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமான முறையில் இரவு நேர சுழியோடி (Diving) நடவடிக்கையில் ஈடுபட்டு கடல் அட்டைகளை பிடித்த 04 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வடமத்திய கடற்படை கட்டளைக்கு சொந்தமான 'இலங்கை கடற்படை கப்பல் புஸ்ஸதேவ' (SLNS Pussadeva) அதிகாரிகளினால் வங்காலை கடற்பரப்பில் இந்த விசேட தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது, அனுமதிப்பத்திரமின்றி இரவு நேரத்தில் சுழியோடி முறையில் கடல் அட்டைகளை சேகரித்துக்கொண்டிருந்த நபர்களை கடற்படையினர் வளைத்து பிடித்தனர்.
இந்த நடவடிக்கையின் போது 349 கடல் அட்டைகள் மற்றும் சுழியோடி உபகரணங்கள் என்பன கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன. கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 26 முதல் 40 வயதுக்குட்பட்டவர்கள் எனவும், அவர்கள் வங்காலை பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள், கைப்பற்றப்பட்ட கடல் அட்டைகள் மற்றும் சுழியோடி உபகரணங்கள் என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் மீன்வளப் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
எம்.யூ.எம்.சனூன்

7 minute ago
10 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
10 minute ago
1 hours ago
1 hours ago