Janu / 2024 பெப்ரவரி 01 , பி.ப. 05:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற, கிளிநொச்சி - ஊற்றுப்புலம் பகுதியை சேர்ந்த பொ.அபிசாகன் (வயது 20) வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகி சிகிச்சைப்பெற்று வந்த நிலையில் வியாழக்கிழமை (01) உயிரிழந்துள்ளார்.
தலைக்கவசம் அணியாத நிலையில் குறித்த இளைஞன் கடந்த 26 ஆம் திகதி மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்றுக்கொண்டிருந்த போது, மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து மதிலுடன் மோதி விபத்துக்குள்ளாகியது.
அவரை மீட்டு கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டுள்ளதுடன் உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
எஸ். தில்லைநாதன்
37 minute ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
3 hours ago
3 hours ago