2025 ஜூலை 17, வியாழக்கிழமை

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி வேண்டும்

R.Tharaniya   / 2025 ஜூலை 16 , பி.ப. 12:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

'சம உரிமைகளை வெல்வோம் இனவாதத்தை முடிவுக்கு கொண்டு வருவோம்' எனும் தொனிப்பொருளில் சம உரிமை இயக்கம் ஏற்பாடு செய்த எதிர்ப்பு பதாகையில்  கையொப்பமிடும் நிகழ்வு புதன்கிழமை (16) அன்று காலை 10.30 மணியளவில் மன்னார் பஜார் பகுதியில் இடம்பெற்றது.

இதன் போது   காணாமல் ஆக்கப்பட்ட அனைவருக்கும்  நீதி வழங்கு ,இன்னொரு அடக்குமுறைச் சட்டங்கள் வேண்டாம், பயங்கரவாத தடைச் சட்டத்தை   உடனடியாக  ரத்து செய், அனைத்து தேசிய இனங்களுக்கு சம உரிமைகளை உறுதி செய்யும் அரசியல் அமைப்பிற்காக போராடுவோம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து எதிர்ப்பு பதாகையில்  கையொப்பம் சேகரிக்கப்பட்டது.

இதன் போது பொதுமக்கள்,சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்து கையொப்பத்தை பதிவு செய்தனர்.

எஸ்.ஆர்.லெம்பேட்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X