2025 மே 12, திங்கட்கிழமை

கணவனால் தாக்கப்பட்டு மனைவி சிகிச்சை

Mayu   / 2023 டிசெம்பர் 31 , மு.ப. 10:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிளிநொச்சி பூநகரி வலைப்பாட்டி பகுதியில் கணவனால் கத்தியால் தாக்கப்பட்டு படுகாயமடைந்த நிலையில் பெண்ணொருவர் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை (31)அதிகாலை 05.00 மணியளவில் பூநகரி வலைப்பாட்டில் இடம் பெற்றுள்ளது.

சம்பம் தொடர்பில் தெரியவருவதாவது: போதையில் இருந்த கணவன் மனைவியுடன் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டதுடன் மனைவி மீது கத்தியினால் தலையிலும் கழுத்திலும் வெட்டியுள்ளார்.

இந்தநிலையில், படுகாயமடைந்த பெண் அயலவர்களின் உதவியுடன் பல்லவராயன்கட்டு சந்தி வரை கொண்டு வரப்பட்டு பின் யாழ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நடராசா  கிருஸ்ணகுமார்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X