2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

களஞ்சிய சாலையில் தீ விபத்து: இருவர் உயிரிழப்பு

Mayu   / 2024 ஜனவரி 02 , மு.ப. 10:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியில் கடற்தொழிலாளர்களின் களஞ்சிய சாலையில், செவ்வாய்க்கிழமை  (02) அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். 

மலையகம் , உடப்புசல்லாவ பிள்ளையார் லோமன் தோட்டத்தைச் சேர்ந்த வேலாயுதம் புவனேஸ்வரம் (வயது 46) மற்றும் வேலாயுதம் ரவி (வயது 38) ஆகிய இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பருத்தித்துறை முனை பகுதியில் கடற்தொழில் உபகரணங்கள் வைக்கப்பட்டு இருந்த களஞ்சிய சாலையில் இருவரும் உறங்கி கொண்டிருந்த வேளை தீ விபத்து ஏற்பட்டு இருவரும் , உறக்கத்திலையே தீயில் எரிந்து உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது. 

தீ விபத்துக்கான காரணம் தெரியவராத நிலையில் , சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

எம்.றொசாந்த் , நிதர்ஷன் வினோத்

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X