Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Janu / 2023 டிசெம்பர் 11 , பி.ப. 04:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
சர்வதேச மனித உரிமைகள் தினத்தையொட்டி மன்னார் மாவட்ட பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான இணையத்தின் ஏற்பாட்டில் மன்னார் பஜார் பகுதியில் திங்கட்கிழமை (11) காலை 11 மணியளவில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன் போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர்.
குறிப்பாக “மன்னார் மாவட்டத்தில் இடம்பெற்ற அரச காணிகள் கொள்ளை தொடர்பாக நீதியை பெற்றுத் தாருங்கள், பல அரச அதிகாரிகளின் ஆசீர்வாதத்துடன் பல மேய்ச்சல் தரைகள், கடற்கரையோரம், காட்டு நிலங்கள் போன்றன பணக்காரர்களுக்காக தாரை வார்க்கப்படுகின்றன. அதனை விரைந்து தடுத்து நிறுத்தவும்.
மணல் வளம் பல வசதி படைத்தவர்கள் மற்றும் அரச அதிகாரிகளால் சூறையாடப்பட்டு வருகிறது. மேலும் கடல் வளம் முறையற்ற நிலையில் அழிக்கப்பட்டு வருகிறது இந்நிலையில் இந்திய டோலர் படகுகள் எமது மீனவர்களின் வியாபாரத்தைச் சிதைக்கின்றனர்.
கடற்றொழில் அமைச்சானது தெற்கில் மீனவர்களின் வாழ்வாதாரங்கள் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகின்ற போதிலும் வடக்கு மீனவர்கள் மிகவும் ஒடுக்கப் படுகின்றார்கள்.” என குற்றச்சாட்டினர்.
இந்நிலை மாற வேண்டுமெனவும், காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் உரியத் தீர்வு கிடைக்க வேண்டும் எனவும் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
ரொசேரியன் லெம்பெட்
1 hours ago
1 hours ago
23 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
23 Aug 2025