Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Janu / 2024 ஜூன் 30 , பி.ப. 02:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
இரணைமடுக் குளத்தில் நீராடச் சென்ற 14 வயது சிறுவன் காணாமல் போன நிலையில் சடலமாக ஞாயிற்றுக்கிழமை (30) மீட்கப்பட்டுள்ளார்.
முறிகண்டி வசந்தநகர் பிரதேசத்தை சேர்ந்த 14 வயதுடைய செல்வரத்தினம் றுசாந்தன் என்ற சிறுவனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் .
குறித்த சிறுவன், அவரது சகோதரன் உட்பட நால்வருடன் நீராடுவதற்காக, கிளிநொச்சி நீர்ப்பாசன குளமான இரணைமடுக்குளத்திற்கு , சனிக்கிழமை (29) காலை 11.30 மணியளவில் சென்ற போது நீரில் மூழ்கிய நிலையில் அருகில் உள்ள இராணுவ முகாமிற்கும், உறவினர்களிற்கும் தகவல் வழங்கியுள்ளனர்.
இந் நிலையில், சனிக்கிழமை (29) முதல் இரணைமடு மீனவர்களுகும், பிரதேச மக்களும் சிறுவனை தேடும் பணியில் ஈடுபட்டு வந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை (30) அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் .
மேலும் இச் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மாங்குளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
பு.கஜிந்தன்
39 minute ago
40 minute ago
46 minute ago
56 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
40 minute ago
46 minute ago
56 minute ago