2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

காணி தொடர்பாக விழிப்புணர்வு

Janu   / 2024 ஜூலை 25 , பி.ப. 05:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

இழந்த காணிகளை ஜனநாயக ரீதியில் பெற்றுக் கொள்வதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் தெளிவூட்டும் விழிப்புணர்வு நிகழ்வு இன்றைய தினம் வியாழக்கிழமை (25) முசலி கோட்ட கல்வி பணிமனை இல் இடம்பெற்றது.

அரச திணைக்களங்கள்,பாதுகாப்பு படையினர் வசமுள்ள பொதுமக்களின் காணிகளை ஜனநாயக ரீதியாக பெற்றுக் கொள்வதற்கு இளைஞர்கள் முன்னெடுக்க வேண்டிய நடைமுறைகள் தொடர்பில் மெசிடோ நிறுவனத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் ஜாட்சன் பிகிறாடோ தலைமையில் குறித்த கலந்துறையாடல் இடம் பெற்றது.

குறித்த கலந்துரையாடலின் போது  காணி தொடர்பான ஆவணங்களை சரி பார்ப்பது, தகவல் சேகரிப்பது ,ஆவணங்களை பெற்று கொள்வதற்கு தகவல் அறியும் உரிமை சட்டத்தை பயன்படுத்துவது தொடர்பிலும் தெளிவூட்டப்பட்டது.

குறித்த நிகழ்வில் மெசிடோ நிறுவன ஊழியர்கள், முசலி இளைஞர் சேவை அதிகாரி உட்பட 40 க்கும் மேற்பட்ட இளைஞர் யுவதிகள் கலந்து கொண்டனர்.

எஸ்.ஆர்.லெம்பேட்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X