2025 மே 02, வெள்ளிக்கிழமை

காய்ச்சலால் பீடிக்கப்பட்ட பெண் மரணம்

Editorial   / 2024 நவம்பர் 07 , மு.ப. 11:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ். தில்லைநாதன்

மூன்று நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட பெண்ணொருவர் உயிரிழந்தார். வடமராட்சி - துன்னாலை கிழக்கு, குடத்தனையை சேர்ந்த 68 வயதுடைய  6 பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து மேலும் அறிய வருவதாவது,

குறித்த பெண் கடந்த 3 ஆம் திகதி காய்ச்சலால் பீடிக்கப்பட்டார். 4ஆம் திகதி மந்திகை மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், அன்றிரவே மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.எனினும், அவர் புதன்கிழமை (06) யிரிழந்தார்.

அவரின் மரணம் தொடர்பில் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X