2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

“கால்நடைகள் திருட்டு ​தொடர்கிறது”

Freelancer   / 2023 நவம்பர் 06 , பி.ப. 03:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.தமிழ்ச்செல்வன்

கிளிநொச்சி-கனகபுரம் 10ஆம் மற்றும் 10 பண்ணை பகுதிகளில் தொடர்ச்சியாக கால்நடைகள் திருடப்பட்டு வருவதோடு, களவுகளும் இடம்பெற்று வருவதாக  மக்கள் தெரிவித்துள்ளனர்.

வாழ்வாதாரத்திற்காக வளர்க்கப்பட்டு வருகின்ற கால்நடைகள் திருடப்பட்டு பராமரிப்பு இன்றி காணப்படுகின்ற காணிகளுக்குள் வெட்டப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், பகல் வேளைகளில் வீடு புகுந்து கத்தி முனையில் பணம் நகைகள் என்பனவும் கொள்ளையிட்டு சென்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகவும் இதனால் இரவு வேளைகளில் மட்டுமின்றி பகலிலும் வீடுகளில் தனியாக இருப்பது அச்சத்தை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் பொலிஸ் நிலையங்களில் பல முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ள போதும், எந்தவித நடவடிக்கை எடுக்கப்படவில்லை  என மக்கள் கவலையுடன் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X