2025 மே 03, சனிக்கிழமை

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு குடும்பஸ்தர் மரணம்

Janu   / 2024 ஓகஸ்ட் 29 , பி.ப. 05:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

வவுனியாவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் வியாழக்கிழமை (29) இடம்பெற்றதாக பூவரசன்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம், சில்லாலை பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான மைந்தன் இருதயராஜா (வயது 36) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் .

வவுனியா, கற்பகபுரம்  பகுதியில் கடந்த செவ்வாய்கிழமை அன்று தனது நண்பர்களுடன் மது விருந்துபசாரத்தில் கலந்து கொண்ட இளைஞன் மீது அங்கு வந்த குழுவொன்று கூரிய ஆயுதத்தால் தாக்கி விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

சம்பவத்தில் காயமடைந்த இளைஞன் வவுனியா வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு மீண்டும் வவுனியா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் .

சடலத்தை பார்வையிட்ட மாவட்ட நீதிபதி இது தொடர்பான வாக்குமூலங்களை பெற்றிருந்ததுடன் சம்பவம் தொடர்பில் பூவரசன்குளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X