2025 மே 09, வெள்ளிக்கிழமை

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி ; நாளை அகழ்வு

Freelancer   / 2023 செப்டெம்பர் 05 , பி.ப. 04:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

சண்முகம் தவசீலன்

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப் பணி  புதன்கிழமை (06) காலை 7.30 மணிக்கு ஆரம்பிக்கப்படும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கொக்குத்தொடுவாய் பகுதிக்கு இன்று (05) மாலை விஜயம் மேற்கொண்ட முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி த.பிரதீபன், தொல்பொருள் சிரேஸ்ட பேராசிரியர் ராஜ் சோமதேவ, முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி க.வாசுதேவ, யாழ்ப்பாணம் சட்ட வைத்திய அதிகாரி செ.பிரணவன் ஆகியோர் ஆராய்ந்தனர்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த சட்ட வைத்திய அதிகாரி வாசுதேவ, சீரற்ற காலநிலை காரணமாக செவ்வாய்க்கிழமை (05) ஆரம்பிக்கப்பட இருந்த மனித புதைகுழி அகழ்வு பணியானது புதன்கிழமை (06) காலை 7.30 மணிக்கு ஆரம்பமாகும் என தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X