2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

செம்மணியில் 45 மனித எலும்புக் கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது

R.Tharaniya   / 2025 ஜூலை 06 , மு.ப. 09:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

செம்மணி மனித புதைகுழியில் இதுவரை 45 மனித எலும்புக் கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் புதிதாக அகழப்படும் புதைகுழியில் மண்டையோடொன்று அவதானிக்கப்பட்டது.

செம்மணி மனித புதைகுழி அகழ்வுப் பணிகள் தொடர்பாக சனிக்கிழமை (05) அன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே சட்டத்தரணி வி.எஸ்.நிரைஞ்சன் இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழி வழக்கின் இரண்டாம் கட்டத்தில் பத்தாம் நாள் சனிக்கிழமை (05) அன்று யாழ்ப்பாணம் நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் நடைபெற்றது.

இதுவரை மொத்தமாக 45 மனித எலும்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது டன் 42 மனித எலும்புக் கூடுகள் அகழ்ந்தெடுத்து பட்டிருக்கின்றது. இதேவேளை புதிதாக மூன்று எலும்புக்கூடுகள் அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறது.

செய்மதிப் படம் மூலம் அடையாளப்படுத்தப்பட்டு அகழப்படும் சந்தேகத்துக்கிடமான பகுதியில் மண்டையோடு ஒன்று அவதானிக்கப்பட்டுள்ளது - என்றார்.

நிதர்சன் வினோத்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .